வெட்கத்தில் சொக்கவைத்த கீர்த்தி சுரேஷ்..பட்டையை கிளப்பும் ஹனிமூன் போட்டோஸ் ..!
நடிகை கீர்த்தி சுரேஷின் ஹனிமூன் போட்டோஸ் இணையத்தில் தீயாய் பரவிவருகிறது !

ரஜினிமுருகன், பைரவா, நடிகையர் திலகம், சண்டைக்கோழி 2, சாமி 2 போன்ற படங்ககளில் நடித்து தமிழ்நாட்டு இளைஞர்களின் கனவு கன்னிகாக இப்பொழுதுவரை கலக்கி வருபவர் கீர்த்தி சுரேஷ் .கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ‘அந்தோணி தட்டிலை’ 15 வருடங்களாக காதலித்து வந்த கீர்த்தி சுரேஷ், கடந்த 2024 டிசம்பர் 12ஆம் தேதி கோவாவில் பாரம்பரிய தமிழ் பிராமண மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டார். இவரது திருமண நிகழ்ச்சியில் ஏராளமான திரை பரபலங்கள் கலந்துகொண்டனர். குறிப்பாக நடிகர் விஜய் திருமணத்திற்கு சென்று அவர்களுடன் எடுத்த போட்டா செம டிரெண்ட் ஆனது

தொடர்ந்து படப்பிடிப்பில் பிஸியான கீர்த்தி சுரேஷ் தன்னுடைய கணவருடன் ஹனிமூனுக்கு மாலத்திவுக்கு சென்று தனது கணவருடன் செலவழித்த அனைத்து மகிழ்ச்சியான தருணங்களையும் புகைப்படங்களாக இணையத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ‘ரிவால்வர் ரீட்டா’ அன்னோன்ஸ்மண்ட் வீடியோ இன்று வெளியாக உள்ள நிலையில் இந்த ஹனிமூன் போட்டோஸ் இணையத்தில் தீயாய் பரவிவருகிறது
