திருவண்ணாமலையில் உலக நன்மைக்காக மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற குபேர மகாலட்சுமி மகா யாகத்தில் நடிகர் சூரி குடும்பத்துடன் கலந்து கொண்டார்

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலையில்
உலக நன்மைக்காக ஸ்ரீ.அஷ்டலட்சுமி நவநிதி சகித ஸ்ரீ.குபேர தன ஆகர்ஷன மகாலட்சுமி மகா யாகம் விமர்சையாக நடைபெற்றது.திருவண்ணாமலை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த கைலாய மலை வடிவிலான முகப்பு தோற்றத்தில் உள்ளே திருக்கோவில் போல பிரம்மாண்ட செட் அமைத்து யாக குண்ட வளாகத்தில் ஸ்ரீ.குபேர லட்சுமி
தாயார் சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

முன்னதாக பெங்களூரு சாலையில் இருந்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வராகி அம்மன் சிலையை பக்தர்கள் தோளில் சுமந்தவாறு கைலாய வாத்தயங்கள் செண்டை மேளமமும், வானவேடிக்கைகள் முழங்க சுற்றி வந்தனர்.

தொடர்ந்து நாளை அனைத்து நட்சத்திரங்களுக்கும் தனித்தனியாக யாக குண்டங்கள் அமைத்து 125 தீட்சிதர்கள் மூலம் உலக நன்மைக்காக பல்வேறு வகையான மூலிகை பொருட்களைக் கொண்டும் பல வகைகள் மற்றும் வஸ்திரங்களைக் கொண்டும் சிறப்பு மகாயாகம் நடைபெற உள்ளது.
இந்த மகா யகத்தில் திரைப்பட நடிகர் சூரி தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கலந்துகொண்டார்

மேலும் வெள்ளித்திரை, சின்னத்திரை நடிகர்கள், நடிகைகள் பாடகர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஏராளமானோர் இந்த குபேர மகா யாகத்தில் கலந்து கொண்டு சங்கல்பம் செய்து சாமி தரிசனம் செய்தனர்.

அதேபோல் நூற்றுக்கணக்கான ஜப்பான் நாட்டை சேர்ந்தவர்கள் மகா சங்கல்பம் செய்து மனமுருக சாமி தரிசனம் செய்தனர்.
