Take a fresh look at your lifestyle.

திரைத்துறையில் போதை- விஜய் ஆண்டனி!

ஸ்ரீகாந்த் மீது விசாரணை

236

திரைத்துறையில் போதைப் பொருள் உபயோகம் நீண்ட நாட்களாகவே இருக்கிறது என நடிகர் விஜய் ஆண்டனி வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளார்

27 ஆம் தேதி திரையரங்கிலே வெளியிட ப்பட உள்ள மார்பின் திரைப்படத்தின் ப்ரோமோஷன்ளுக்காக மதுரைக்கு வந்த திரைப்பட குழுவினர் தொடர்ந்து ரசிகர்களையும் பொதுமக்களையும் சந்தித்த பிறகு
திரைப்படத்தின் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் நடிகர் விஜய் ஆண்டனி செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது திரைத்துறையில் போதைப் பொருள் உபயோகம் நீண்ட நாட்களாகவே இருக்கிறது. போதைப் பொருள் பயன்பாடு என்பது இன்று நேற்று அல்ல இப்போது இருப்பவர்கள் கூட யாராவது ஒருவர் போதைப் பொருளுக்கு அடிமையாக இருக்கலாம்.போதைப்பொருள் பழக்கம் நீண்ட நாட்களாக இருக்கிறது குறிப்பாக சிகரெட் குடிப்பது முதல் அதில் இருக்கக்கூடிய ஒன்றுதான் என்றும் ஸ்ரீகாந்த் மீது காவல்துறையினர் விசாரணை செய்து வருவதால் கருத்து கூற முடியாது என்றும் தெரிவித்தார்

 

தொடர்ந்து பேசிய நடிகர் விஜய் ஆண்டனி மதுரையின் சாப்பாடு எனக்கு பிடிக்கும் என்றும் தெய்வீக ராகம் தெவிட்டாத காலம் , அந்தி மழை பொழிகிறது இப்படி இயற்கையான இசையை ஏன் தொழில்நுட்பம் கொடுக்க முடியுமா என தெரியவில்லை என்றார் . அமர்ந்த இடத்தில் உத்தரவு பிறப்பித்து போர் செய்யுங்கள் என்று சொல்லுவது தவறு என்றும் போர் வருத்தம் அளிக்கிறது என்றும் கூறினார்

 

மேலும் எம்ஜிஆர் கருணாநிதியை போன்று திறமையுள்ளவர்களுடைய ஆட்சி நன்றாகத்தான் இருந்தது அதனால் சினிமாவிலிருந்து வரக்கூடியவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய தனித்திறமையால் தான் அரசியலில் நிலைத்து நிற்கிறார்கள் என்றும் நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்