மகளுடன் ஏ.ஆர்.முருகதாஸ் குத்தாட்டம்..!
மகளின் மஞ்சள் நீராட்டு விழாவில் குத்தாட்டம் போட்ட ஏ.ஆர்.முருகதாஸ்..!
மகளின் மஞ்சள் நீராட்டு விழாவில் மகன் மற்றும் மகளுடன் நடனமாடி அசத்தி இருக்கிறார் திரைப்பட இயக்குனர் முருகதாஸ்!

கள்ளக்குறிச்சியை சொந்த ஊராகக் கொண்ட பிரபல திரைப்பட இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் மகள் ஹர்ஷிதாவின் மஞ்சள் நீராட்டு விழா கள்ளக்குறிச்சியில் உள்ள பிரபல தனியார் மண்டபத்தில் நடந்தது.முருகதாஸின் உறவினர்கள் மற்றும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த அவரது நண்பர்கள் குடும்பத்தினர் என ஆயிரக்கணக்கான பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் ஏ ஆர் முருகதாஸ்
தனது மகள் ஹர்ஷிதா மற்றும் மகன் ஆதித்யா ஆகிய இருவருடனும் சேர்ந்து மேடையில் உற்சாகமாக நடனமாடிய கட்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது .
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் கைத்தட்டி உற்சாகமாக ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..