அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு 242 பயணிகளும் மிகவும் மகிழ்ச்சியாக தனது குடும்பத்துடன் பயணிக்க தொடங்கிய 25 வினாடி பொழுதில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஏர் இந்தியா விமானம் அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி மீது விழும் என ஒருவரும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள், அதேபோல் இந்த விமான விபத்தில் கல்லூரியில் மகிழ்ச்சியாக சாப்பிட்டுக்கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்த மாணவர்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். மேலும் பலர் பலத்த காயங்களுடனும் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மட்டும் பாலி எண்ணிக்கை 274 ஆக உள்ளது.

நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவம் குறித்து சென்னை விமான நிலையத்தில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் அகமதாபாத் விமான விபத்து ரொம்ப வருத்தமான விஷயம்.ஆண்டவன் அருளால் இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கணும் என தெரிவித்து சென்றார்.

தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த் டெய்லர் 2 திரைப்படத்தில் நடிப்பதற்காக பெங்களூரு புறப்பட்டு செல்கிறேன் என்றும் கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக இருப்பதும் தெரிவித்தார்