Take a fresh look at your lifestyle.

சிவான்னாவுக்கு நான் சித்தப்பா – கமல்ஹாசன் !

சிவான்னாவுக்கு நான் சித்தப்பா மாதிரி என சிவராஜ்குமாருக்கு கன்னடத்தில் வாழ்த்து கூறியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்

92

கன்னட திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் முன்னணி நடிகர் சிவ ராஜ்குமார்.  திரையுலகில் 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார் .அவருக்கு கன்னடம் மட்டும் இல்லாமல் தமிழ் , தெலுங்கு திரைத்துறையில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது .இந்த நிலையில் சிவராஜ்குமாருக்கு நடிகர் கமல்ஹாசன் கன்னடத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்

சிவான்னாவுக்கு நான் சித்தப்பா மாதிரி. ராஜ்குமார் அண்ணா எனக்கு காட்டின அன்பு எதிர்பாராத அன்பு. சிவான்னாவை பொறுத்தவரை இந்த 40 வருஷம் எப்படி ஓடிச்சுன்னு எனக்கு தெரியல. இன்னிக்கு மாபெரும் நட்சத்திரமாக உயர்ந்து சாதித்துக்கொண்டிருக்கிற விஷயம்… இனியும் சாதிக்கக்கூடிய விஷயம் எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது என்று கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்

#KamalHaasan Sir Wishing #Shivanna 40 Year’s Journey In Film Industry 😍Thank You @ikamalhaasan Sir ❤#DrShivarajkumar #Shivanna40 #ShivaSainya @NimmaShivanna ❤❤❤ @ShivaSainya pic.twitter.com/pEOazxoewp

— ShivaSainya (@ShivaSainya) June 10, 2025

ஏற்கனவே கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், “கமல்ஹாசனை விமர்சிப்பவர்கள் கன்னட மொழிக்காக என்ன செய்தார்கள்?” என்று நடிகர் சிவராஜ்குமார் கேள்வி எழுப்பி கமல்ஹாசனுக்கு ஆதரவாக பேசியிருந்தார்.தற்போது கமல் கன்னடத்தில் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளது கன்னடர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது