Take a fresh look at your lifestyle.

Kubera Dhanush: எனக்கு இந்தி தெரியாது..!

மும்பையில் சம்பவம் செய்த தனுஷ் !

97

மும்பை : படு பிஸியா பல படங்களில் நடித்து வரும் நடிகர் தனுஷ் மும்பையில ஒரு மாஸ் சம்பவத்தை பண்ணி இருக்காரு !

தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்க படம் குபேரா . இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி இருக்க இந்த படம் வரும் 20ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கு. இதற்கான பிரமோஷன் வேலைகள் மொத்த டீமுமே இறங்கி இருக்காங்க . மும்பையில் நடைபெற்ற படத்தின் புரோமோசனில் கலந்து கொண்ட தனுஷ் தனக்கு இந்தி தெரியாது எனவும், தமிழும் ஆங்கிலமும் நன்கு பேசவரும் என்று தக் லைஃப் ரிப்ளை கொடுத்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Photo Credit:

Amigos Creations

எல்லாருக்கும் வணக்கம். உங்கள் அனைவரையும் பார்த்ததில் ரொம்பவும் சந்தோஷம் எனக்காக இங்கு வந்துள்ளீர்கள், உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை என்று தமிழில் பேசினார் தனுஷ் அப்போது அரங்கமே அதிரும் அளவுக்கு ரசிகர்கள் கைதட்டினர். அதன் பின்னர் ஆங்கிலத்தில் எனக்கு இந்தி தெரியாது. தமிழ் நன்றாகத் தெரியும், ஆங்கிலம் கொஞ்சம் தெரியும், அதை வைத்துதான் எல்லாவற்றையும் சமாளித்து வருகிறேன் என்று பேசினார் .அப்போது அங்கிருந்த நபர் ஒருவர் நான் இந்தி சொல்லி தருகிறேன் என சொல்லி ஒரு வார்த்தை இந்தியில் சொல்ல தனுஷ் அழகா அதை ரிப்பீட் செய்தார்


Photo Credit:

Amigos Creations

ராஞ்சனா (2013), ஷமிதாப் (2015), மற்றும் அத்ராங்கி ரே (2021) உள்ளிட்ட நேரடி இந்தி படங்களில் இந்தி தெரியாமலேயே சிறப்பாக நடித்திருக்கிறார் அவர் மட்டும் நன்றாக இந்தி பேச கற்றுக்கொண்டால் இன்னும் சிறப்பாக பல படங்கள் நடிக்கலாம் என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

https://x.com/i/status/1932402378722222420