Take a fresh look at your lifestyle.

கொல்லங்குடி கருப்பாயி காலமானார் !

ஜெ. கையில் கலைமாமணிவாங்கிய ஆண்பாவம் பாட்டி

96

கலைமாமணி கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் (99) வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார்.

சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியில்14.6.25 இன்று கலைமாமணி கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் காலை 8 மணி அளவில் இயற்கை எய்திவிட்டார் அவருடைய இறுதி நிகழ்ச்சி நாளை மதியம் கொல்லங்குடிஅவரது இல்லத்தில் இருந்து நல்லடக்கம் செய்யப்படுகிறது

கொல்லங்குடி முத்தன் கருப்பியம்மாள் இவர்களுக்கு இரண்டாவது மகளாக பிறந்தவர் உடன் பிறந்தவர்கள் சகோதரி மெச்சியம்மாள் சகோதரர்கள் சோலைமலை சுப்பையா ஆறுமுகம் இவர்கள் உடன் பிறந்தவர்கள் கருப்பாய அம்மாவுக்கு வயது 99 இவர் கொல்லங்குடியில் கிராமிய பாடல்களை பாடி நன்கு அறிமுகமானவர் இவரது பாடல்கள் வானொலிகளில் ஒளிபரப்பு காலங்களை கண்டறிந்து சினிமா துறையில் ஆர் பாண்டியராஜன் ஆண்பாவம் என்கிற திரைப்படம் மூலமாக இவரை அறிமுகப்படுத்தினார் அதற்கு அடுத்து தொடர்ச்சியாக அவர் இயக்கம் படங்களில் ஏட்டிக்கு போட்டி கபடி கபடி கோபாலா கோபாலா ஆண்களை நம்பாதே இயக்குனர் சசிகுமார் நடித்த காரி என்ற திரைப்படத்திலும் கடைசியாக நடித்துள்ளார்

கொல்லங்குடி கருப்பாய அம்மாள் மறைந்த முன்னாள் முதல்வர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்களிடம் கலைமாமணி விருது பெற்றவர்கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் கொல்லங்குடி கருப்பாய அம்மாளிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்ட பொழுது கொல்லங்குடி எங்கள் ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் அதை ஏற்ற தமிழக முதல்வர் உடனடியாக பட்டா வழங்க உத்தரவிட்டார் குறிப்பிடத்தக்கது