Take a fresh look at your lifestyle.

கலைஞர் குடும்பத்தில் மருமகனாகும் அனிருத்!

ரூ.33,400 கோடி சொத்துக்கு வாரிசு..

89

கலைஞர் குடும்பத்துக்கு மருமகனாகப்போகிறாராமே இசையமைப்பாளர் அனிருத். இதுதான் இப்போ கோலிவுட் ஹாட் டாபிக்காக இருக்கிறது

நடிகர் ரவி ராகவேந்திராவின் மகனும் , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு நெருங்கிய சொந்தக்காரரான அனிருத் ரவிச்சந்திரன் தன்னுடைய 16 வயதில் இசைத்துறையில் நுழைந்து தற்போது ராஜாவாக வலம்வருகிறார் . அனி ம்யூசிக் இருந்தாலே படம் ஹிட் என்ற நிலைமையில் பல பெண்களுடனும் காதல் கிசுகிசுக்களுக்கு பஞ்சமே இல்லாமல் இருந்தார் .

இந்த கமல் பட ஹீரோயினுடன் காதல் ,இந்த பாடகியுடன் காதல் என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் வலம்வந்த அனிருத் விரைவில் கலைஞர் வீட்டு மருமகனாகப்போகிறாராம் என்ற செய்தி வெளிவந்துள்ளது . பொண்ணு யாருன்னு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க .ரூ.33,400 கோடி சொத்துக்கு வாரிசு ஆன காவியா மாறன் தான் அனிருத் காதலுக்கும் பெண்ணாம் . சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவியா மாறன், அதுதாங்க நம்ப சன் பிக்சர்ஸ் அண்ட் சன் நெட்வொர்க் உடைய உரிமையாளர் கலாநிதி மாறனோட மகளுக்கும், அனிருத்துக்கும் நீண்ட காலமாக லவ் ட்ராக் ஓடிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இவர்களது காதல் தற்போது பெற்றோர் சம்மதத்துடன் கல்யாணமாக கனிய உள்ளதாக கூறப்படுகிறது. மியூசிக் உலகில் வெற்றிக்கொடி கட்டி வரும் அனிருத், சொந்த வாழ்க்கையில் எப்போது நல்ல செய்தி கொடுக்கப்போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த நிலையில் இப்போ கலைஞர் வீட்டு மருமகனாக போகிறார் என்ற செய்தி கேட்டு ரசிகர்கள் அனிருத் பெரிய மச்சக்காரன் தான் என வாழ்த்தி வருகின்றனர்.