Take a fresh look at your lifestyle.

சிம்பு – வெற்றிமாறன் படம் ஷூட்டிங் எப்போ தெரியுமா?

87

எஸ்டிஆர், Atman என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சிம்ப முதன்முறையாக கமலுடன் இணைந்து நடித்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான தக் லைஃப் படம் பெரிதாக ஓடவில்லை . தற்போது தேசிங்கு பெரியசாமி அஸ்வத் மாரிமுத்து, ராம்குமார் பாலகிருஷ்ணன் ஆகியோரின் படங்களில் நடிக்கவிருக்கிறார். சிம்பு . அதேசமயம் தேசிங்குடனான படம் ட்ராப்பாகிவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.

பல பிரச்சனைகளுக்கு பின்னர் கம்பேக் கொடுத்த சிம்பு நடிக்கும் படங்கள் பட்டையை கிளப்பாமல் சீக்கிரம் பெட்டியை கட்டி கிளம்புவதால் அவரது ரசிகர்கள் சற்று சோர்வடைந்த நிலையில் தற்போது அவர்களை குத்தாட்டம் போடவைக்கும் செய்தி வெளியாகியுள்ளது . வெற்றிமாறனுடன் சிம்பு இணைந்திருப்பதாக கோலிவுட் பட்சி தகவல் சொல்லியிருக்கிறது . சூர்யாவை வைத்து வெற்றிமாறன் இயக்கவிருந்த வாடிவாசல் படம் கைவிடப்பட்டதால் சிம்புவை சந்தித்து கதை சொல்லி ஓகே வாங்கியதாகவும் கோலிவுட் முழுக்க பரபரக்கிறது.

தனுஷை வைத்து வடசென்னை என்ற க்ளாசிக் படத்தை கொடுத்தது போல தற்போது அதே வடசென்னையை மையமாக வைத்து கதை உருவாகவிருக்கிறது என்றும் விவரமறிந்தவர்கள் சொல்ல எஸ்டிஆர் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள். படத்தின் ஷூட்டிங் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி ஜூலை 16ஆம் தேதி எண்ணூரில் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாக பேசப்படுகிறது.